40 வயதுடைய Raffia Arshad முதன் முதலில் ஹிஜாப் அணிந்த நீதிபதியாக இங்கிலாந்தில் நியமனம் பெற்றுள்ளார்.
நீதித்துறையில் 17 வருட அனுபவத்தைக் கொண்ட Raffia Arshad, பிரதி மாவட்ட நீதிபதியாக Midlands இல் நியமிக்கப்பட்டுள்ளார்.
“இதனை நான் பெரும்பேறாகக் கருதுகின்றேன், பெண்கள் அனைவருக்கும் கிடைத்த அங்கீகாரமாகவே இதனைக் காண்கின்றேன்.” என்று Raffia Arshad குறிப்பிட்டார்.
குழந்தைகளின் உரிமை, கட்டாயத் திருமணம் மற்றும் பெண்கள் உரிமைகள் போன்ற விடயங்களில் Raffia Arshad சட்ட அனுபவத்தைப் பெற்றுள்ளார். இஸ்லாமிய சட்டப் பிரச்சினைகளுக்கும் இவர் குரல் கொடுத்து வந்துள்ளார்.
Raffia Arshad இஸ்லாமிய குடும்பவியல் சட்டத்தில் நிபுணத்துவம்பெற்றுள்ளதோடு, அது தொடர்பில் கட்டுரைகளும் வரைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.