Muslim History

நடமாடும் மஸ்ஜித், 2020 Olympic நிகழ்வுக்காக.

நடமாடும் மஸ்ஜித்
நடமாடும் மஸ்ஜித், 2020 Olympic நிகழ்வுக்காக.

பாரிய, அழகான, கண்ணைக் கவரும் விதத்தில் இழுத்துச் செல்லக்கூடிய நடமாடும் மஸ்ஜித் ஒன்றை Japan உருவாக்கி இருக்கின்றது. இது Olympic விளையாட்டு மைதானத்திற்கு வெளியில் நிறுத்தப்பட்டவுடன், மெதுவாக அசைந்து தமது பரப்பைக் கூட்டிக் கொண்டு ஒரு மஸ்ஜித்தாக மாறக்கூடியதாகும்.

"2020

2020 Olympic நிகழ்வுக்காக ஆயிரக்கணக்கான ரசிகர்களை வரவேற்பதற்காக Japan தயாராகி வருகின்றது. இந்த வகையில் Tokyo sports and cultural events company யே இந்த நடமாடும் மஸ்ஜித்தை தயாரித்துள்ளது.

"2020

பல்தரப்பட்ட Olympic நிகழ்வுகளை கண்டுகழிக்கும் முஸ்லிம்கள், நீண்ட தூரத்திற்கு மஸ்ஜித்களைத் தேடிச் சென்று, தமது மதக் கடமைகளை நிறைவேற்றும் போது, அசௌகரியத்திற்கு உள்ளாகக் கூடாது என்பதே எமது கூடுதல் விருப்பம் என கருத்துத் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் Japan னின் நல்லெண்ணத்தை முஸ்லிம்களுடன் பகிர்ந்துகொள்ளும் முயற்சியும் கூட எனத் தெரிவிக்கப்பட்டது.

முதலாவது நடமாடும் மஸ்ஜித் Toyota Stadium அருகில் திறந்து காட்டப்பட்டது.

25 தொன் எடையுள்ள பாரவண்டி, தமது இடப் பரப்பினை மஸ்ஜித்தாக மாற்றி அகட்டும்போது 48 சதுரமீற்றர் கொள்ளவை உடையதாகும். ஒரே நேரத்தில் 50 பேர் தொழுகையை நடாத்த முடியுமாகவும் உள்ளது. வுழூச் செய்வதற்குரிய வசதியையும் இம் மஸ்ஜித் உள்ளடக்கியுள்ளது.

"2020

இந்த மஸ்ஜித்தின் முதலாவது திறப்பு விழா நிகழ்வில், 2004 ஆம் ஆண்டில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top