சவூதியில் 100க்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 11 மில்லியன் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தொழில் புரிந்து வருகின்றனர். [2017 ஆம் ஆண்டு புள்ளிவிபர அறிக்கையின்படி]
அதேபோன்று பல வெளிநாட்டு முதலீட்டாளர்களும், சவூதியில் தொழில் நடாத்தி வருகின்றனர்.
இந் நிலையில் தமது நாட்டின் பொருளாதார இஸ்திரத்தன்மையினைக் கருத்தில் கொண்டு சவூதி பல பொருளாதார சீர்திருத்தங்களை அமுல்படுத்தி வருகின்றது. குறிப்பிட்ட சில தொழில்களில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தொழில் புரிய முடியாது என்ற புதிய கொள்கையினை கடந்த காலங்களில் சவூதி அறிமுகப்படுத்தியிருந்தது. அதேபோன்று சட்டவிரோத தொழிலாளர்களை வெளியேற்ற பல நடவடிக்கைகளை சவூதி மேற்கொண்டது.
இந்த வகையில் சவூதியில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பும் பணங்களுக்கு கட்டணம் அல்லது வரி விதித்தல் தொடர்பாக சில ஊடகங் செய்தி வெளியிட்டிருந்தன. இது சவூதியில் தொழில்புரியும் சாதாரண தொழிலாளர்களைப் பாதிப்பதோடு, தொழிலதிபர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகும்.
என்றாலும் இவ் அறிவிப்பு, ஊடகங்களைத் தவிர சவூதியின் பொருளாதார விடயங்களைக் கையாளும் பொறுப்பு வாய்ந்த துறைகளினால் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந் நிலையில் சவூதியின் பொருளாதார விடயங்களைக் கையாளும் நிதி அமைச்சு, இது தொடர்பாக மறுப்பறிக்கையை வெளியிட்டுள்ளது. திங்கட் கிழமை (04.09.2018) இவ்வறிக்கையை நிதி அமைச்சு வெளியிட்டிருந்தது.
மேலும் சவூதியின் நிதி அமைச்சு குறிப்பிடுகையில், தமது நாடு சர்வதேச தராதரங்களுக்கு ஏற்ப இங்கிருந்து பணங்களை அனுப்புவோருக்கு இலவசமாகமாக கட்டணங்கள் அற்றமுறையில் அனுப்பி வைக்கின்றது. இந் நிலையில் அவற்றுக்கு கட்டணங்களை அறவிடப் போவதாக வெளியாகியிருக்கும் செய்திகள் வெறும் வதந்தியாகும் என அவ் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு 38 Bபில்லியன் அமெரிக்க டொலர் பணம் சவூதியில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook(Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள்.
உங்கள் கருத்துகளையும் வரவேற்கின்றோம்.. Click To Comment.