சவுதி,ரியாத்தில் இலங்கை தூதரகம் ஏற்பாட்டில் இலங்கை முஸ்லீம் கலாச்சார நிகழ்வொன்று (Sri Lankan Muslim cultural program) நாளை (17-3-2017) வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் மன்னர் பfஹ்த் கலாச்சார மையத்தில் (King Fahd Cultural Center) இடம்பெறவுள்ளது. இந் நிகழ்வை இலங்கை தூதர் அஸ்மி தாசிம் அவர்களின் தலைமயில், 15 இலங்கை முஸ்லீம் அமைப்புகள் உள்ளடக்கிய குழு ஏற்பாடு செய்துள்ளது.
இன மத வேறுபாடின்றி அனைத்து இலங்கையர்களையும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு, ஏற்பாட்டு குழு அழைப்பு விடுத்துள்ளது.
இந் நிகழ்வில் புத்தக கண்காட்சி, இரத்த தான முகாம், சுற்றுலா தொடர்பான ஆவணப்படம் மற்றும் பல வினோத நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஏற்பாட்டு குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான தாரிக் தமீம் கூறுகையில், இந்நிகழ்வு வெறும் பொழுதுபோக்கு நிகழ்வாக இல்லாமல், இலங்கை முஸ்லிம்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்வாக அமையும் என்றார்.
Arab News