மும்பாயின் தெற்கில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்று சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தியாக்கும் Solar Energy System தை நிறுவியுள்ளது.
இப் பள்ளிவாசலில் குளிரூட்டிகள் பொறுத்தப்பட்ட பின்னர் மாதாந்த மின்சாரப் பட்டியல் 25,000 இந்திய ரூபாயாக அதிகரித்தது. எனவே அதிகரித்த இந்தச் செலவினை குறைத்துக் கொள்ளும் நோக்குடன் நாம் Solar Energy System ஐ நிறுவியதாக பள்ளிவாசலின் பிரதம பொருப்பாளர் Khalil Vasil Khan கருத்துத் தெரிவித்தார். எதிர்வரும் வருடத்தில் 3.75 இந்திய ரூபாயை சேமிக்க முடியும் எனக் கூறினார்.
இப் பள்ளிவாசலில் 72 Solar Panel கள் பொறுத்தப்பட்டுள்ளன. நாளாந்தம் 96 மின்சார அலகுகளை உற்பத்தி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் மூலம் பள்ளிவாசலின் மொத்த மின்சாரத் தேவையில் 90% இந்த Solar Energy System மூலம் கிடைக்க இருக்கின்றது.
தற்போது மின்சாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு நீர் மின் உற்பத்தி நிலையங்களுக்குப் புறம்பாக அனல் மின் உற்பத்தி நிலையங்களில் டீசல் மற்றும் நிலக்கரி போன்ற எரிபொருட்களைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. இதனால் சூழல் அதிக பாதிப்பினை எதிர்கொள்வதோடு சுவாசம் சம்பந்தப்பட்ட பல்தரப்பட்ட சுகாதார சீர்கேடுகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.
எதிர்கால சந்ததிகளின் நலன் கருதி சமூக நிறுவனங்கள் இவ்வாறான முற்போக்கான விடயங்களை சிந்திக்க வேண்டும்.
மேலும் முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook(Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள்.
உங்கள் கருத்துகளையும் வரவேற்கின்றோம்.. Click To Comment