இவ்வருடத்தில் இது வரை 3,024,272 உம்றா விசாக்களை சவூதி அரசு விநியோகம் செய்துள்ளது. இதன்படி 2,561,541 பேர் உம்றா மேற்கொள்ளுவதற்காக சவூதிக்கு வந்து சென்றுள்ளனர் என்று சவூதியின் ஹஜ், உம்றா யாத்திரிகர்கள் தொடர்பான அமைச்சு புள்ளிவிபர தகவல்களை வெளியிட்டுள்ளது.
இத் தகவல் வெளியான (19.01.2019 சனி) தினத்தன்று மக்காவில் 277,372 யாத்திரிகர்களும் மதீனாவில் 122,107 யாத்திரிகர்களுமாக மொத்தம் 399,479 யாத்திரிகர்கள் சவூதியில் உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்கு தங்கியிருந்ததாக அப் புள்ளிவிபரம் குறிப்பிட்டுள்ளது.
இதில் 2,288,789 யாத்திரிகர்கள் விமான மார்க்கமாகவும் 257,266 பேர் தரை வழியாகவும் 15,486 பேர் கப்பல் மூலமும் தமது கடமையை நிறைவேற்ற சவூதிக்கு பயணம் செய்துள்ளனர்.
இவ்வகையில் Pakistan இல் இருந்து 681,392 உம்றா யாத்திரிகர்கள் கூடுதலான அளவு சவூதிக்கு வந்துள்ளனர். இதேபோன்று இதற்கு அடுத்தபடியாக Indonesia வில் இருந்து 447,450 பேரும் India வில் இருந்து 306,470 பேரும் Yemen னில் இருந்து 146,067 பேரும் Malaysia வில் இருந்து 142,290 பேரும் Algeria வில் இருந்து 92,752 பேரும் Turkey இல் இருந்து 86,925 பேரும் Egypt இல் இருந்து 85,438 பேரும் Bangladesh இல் இருந்து 53,131 பேரும் UAE இல் இருந்து 62,927 பேரும் உம்றா கடமையை நிறைவேற்றியுள்ளனர்.
8,259 ஆண் மற்றும் 1,724 பெண் உதவியாளர்களாக மொத்தம் 9,983 பேர் உம்றா யாத்திரிகர்களுக்கு உதவிபுரியும் பொருட்டு கடமையாற்றியதாக அப் புள்ளிவிபர தகவல் தெரிவிக்கின்றது.
2030 ஆம் ஆண்டில் 30 மில்லியன் உம்றா யாத்திரிகர்களை உள்ளீர்ப்பதற்கும் அவர்களுக்குரிய வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சவூதி அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook(Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள்.
உங்கள் கருத்துகளையும் வரவேற்கின்றோம்.. Click To Comment