சிறுவயதில் மட்டுமல்ல தற்போதும் கூட “Robin Hood” என்ற கதாபாத்திரத்தை விரும்பாதவர்கள் எவரும் இல்லர். அரசனின் மற்றும் பணக்காரர்களின் செல்வங்களைக் கொள்ளையடித்து ஏழை மக்களுக்கு அதனைப் பகிர்ந்து கொடுக்கும் Robin Hood என்ற அந்தக் கதாபாத்திரத்தை தொலைக்காட்சியிலும் படங்களிலும் ரசித்திருக்கின்றோம்.
இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் ‘Robin Hood Army’ என்ற ஒரு அமைப்பும் ஏழைகளை இலக்காகக் கொண்டு செயற்படுகின்றது. இவ் அமைப்பு இரண்டு விடயங்களுக்கு எதிராக தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. அதில் ஒன்று பசிக்கு எதிரான போராட்டம் மற்றையது சிறுவர்களுக்கான கல்வியைப் பெற்றுக் கொடுப்பதற்கான போராட்டம்.
இந்த அமைப்பினர் Hotel கள் மற்றும் Restaurant களில் மேலதிமாக எஞ்சிய உணவுகளைப் பெற்று வீதியோரங்களில் வசிப்பவர்களுக்கும் அனாதை இல்லங்களில் உள்ளவர்களுக்கும் நோயாளிகளுக்கும் பங்கிட்டுக் கொடுக்கின்றனர்.
2014ஆம் ஆண்டு வெறும் 6 செயற்பாட்டாளர்களைக் கொண்டு இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது. இன்று 16,542 Robins உறுப்பினர்கள் Asia, Africa, Canada மற்றும் South America ஆகிய நாடுகள் உள்ளடங்களாக 77 நகரங்களில் தமது பணியினை செயற்படுத்தி வருகின்றது.
மேலும் முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook (Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள்.
உங்கள் கருத்துகளையும் வரவேற்கின்றோம்.. Click To Comment.