பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் Gujurat பிராந்தியத்தில் சிறு நகரமொன்றில் இருந்து வித்தியாசமான முறையில் அல்குர்ஆன் பிரதியொன்றை, பெண் ஒருவர் ஊசி நூலைக் கொண்டு அல்குர்ஆன் எழுத்துக்கள் முழுவதையும் கையினால் துணியில் தைத்துள்ளார். இவ்வாறான அல்குர்ஆன் பிரதியொன்றை இதற்கு முன்னர் எவருமே உருவாக்கியதில்லை என அறிவிக்கப்படுகின்றது. Naseem Akhtar என்ற பெண்மணியே இம் முயற்சியை மேற்கொண்டிருந்தார். இதற்காக வேண்டி ஒன்றல்ல இரண்டல்ல 32 வருடங்களை Naseem Akhtar செலவு செய்துள்ளார்.
“நான் எவரது உதவியுமின்றியே இப் பணியை செய்து முடித்துள்ளேன். எனது இளமைக் காலத்திலிருந்தே அல்குர்ஆனை ஊசி நூலைக் கொண்டு இவ்வாறு உருவாக்குவதற்கு தீர்மானித்திருந்தேன். ஆனால் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளினால் என்னால் இப் பணியை ஆரம்பிக்க முடியாமல் இருந்தது. பின்னர் 1987 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதன் பின்னர்தான் என்னால் இப்பணியை ஆரம்பிக்க முடியுமாக இருந்தது.” என்று Naseem Akhtar குறிப்பிட்டுள்ளார்.
“இதற்கான 12 piles துணியை Faislabad இல் இருந்து பெற்றுக்கொண்டேன். 45 inches, 900 inches நீள-அகலமுடைய துணியை ஒரு ஒழுங்கு முறைப்படி வெட்டி ஒழுங்குபடுத்துவதற்கு எனக்கு அதிக காலம் தேவைப்பட்டது.” என்று அவர் விபரித்தார்.
இப் பணியை ஆரம்பித்தபோது இது மிகவும் இலகுவான பணியல்ல என்பதை உணர்ந்து கொண்டேன். ஒரு நாள் முழுவதும் முயற்சி செய்து 3 வரிகளை மாத்திரமே முடிக்க முடியுமாக இருந்தது. இன்னும் ஒரு அல்குர்ஆனைப் பார்த்துப் பார்த்து மிகக் கவனமாக இப் பணியைத் தொடர்ந்தேன்.
இப் புனித அல்குர்ஆன் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவதற்கு தான் எதிர் பார்த்துள்ளதாக Naseem Akhtar குறிப்பிட்டார்.
பாகிஸ்தானில் 96.4% மக்கள் முஸ்லிம்கள் ஆவர். உலகிலேயே அதிக முஸ்லிம் சனத்தொகையைக் கொண்ட Indonesia வுக்கு அடுத்த படியாக பாகிஸ்தான் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook(Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள்.
உங்கள் கருத்துகளையும் வரவேற்கின்றோம்.. Click To Comment