பிரித்தானியப் பிரதமர் திரேசா மே அம்மையார் பிரித்தானியாவில் உள்ள Maidenhead மஸ்ஜித்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். “Visit My Mosque” என்ற வேலைத்திட்டத்தின் அடிப்படையிலேயே அவரது விஜயம் அமைந்திருந்தது. உலகலாவிய ரீதியில் முஸ்லிம்கள் “Visit My Mosque” என்ற வேலைத்திட்டத்தினூடு இஸ்லாம் பற்றியும் மஸ்ஜித் பற்றியும் இஸ்லாத்தை தெரிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்களுக்கு தெளிவுபடுத்தி வருகின்றனர்.
இந்த வகையில் பிரித்தானியாவில் 200க்கு மேற்பட்ட மஸ்ஜித்கள் “Visit My Mosque” என்ற வேலைத்திட்டத்தினூடு இஸ்லாம் பற்றிய தெளிவையும், இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மார்க்கம் என்ற செய்தியையும் வழங்கி வருகின்றன.
இந்த அடிப்படையிலேயே திரேசா அம்மையாரின் விஜயமும் அமைந்திருந்தது. அவர் அங்கு குறிப்பிடுகையில், “இஸ்லாம் அமைதியையும் கருணையையும் உபதேசிக்கும் மார்க்கமாகும். பிரித்தானியாவில் பல்லின பல சமய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் பிரித்தானியாவின் சமூக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருத்தல் வேண்டும். இந்நோக்கத்திற்காக முஸ்லிம் சமயப் பெரியார்களின் “Visit My Mosque” என்ற வேலைத்திட்டத்தை வரவேற்றுப் பேசினார்.