கடந்த வருடத்தில் (2015) அமெரிக்காவில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் 67 சதவீதம் அதிகரித்துள்ளதாக FBI புள்ளிவிபரத் தகவலை வெளியிட்டுள்ளது. 2001, 9/11 தாக்குதலை அடுத்து முஸ்லிம்கள் மீதான இன ரீதியான தாக்குதல் அதிகரித்து வந்துள்ளதாக FBI மேலும் தெரிவித்துள்ளது.
இவ்வாறாக 5850 முறைப்பாடுகளில் 20 சதவீதமான நிகழ்வுகள் சமயம் சார்ந்த தாக்குதலாகவும் சமய நிறுவனங்கள் மீதான தாக்குதலாகவும் அமையப் பெற்றிருந்தது. எஞ்சிய தாக்குதல்கள் இன ரீதியாக அமையப் பெற்றிருந்தது.
2015 ஆம் ஆண்டை விட 2016 இல் முஸ்லிம்கள் மீதான இனரீதியான தாக்குதல்கள் அமெரிக்காவில் மேலும் அதிகரித்துக் காணப்பட்டது. 2016 ஆம் ஆண்டின் முஸ்லிம்கள் மீதான இனரீதியான தாக்குதல் தொடர்பான புள்ளிவிபரங்களை எதிர் வரும் வருடத்திலேயே பெற்றுக்கொள்ள முடியுமாகவிருக்கும்.
அதே நேரம் எதிர் வரும் காலங்களில் டொனால்ட் ரம்பின் காலப்பகுதியில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களும் நெருக்குதல்களும் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தேர்தல் காலங்களில் டொனால்ட் ரம் நடாத்திய தேர்தல் பிரசாரங்கள் ஒரு விடயத்தை தெளிவுபடுத்தியிருக்கின்றது. அமெரிகர் ஒருவரின் தெரிவுகளில் ஒன்றாக இன ரீதியான வன்முறையும் இடம்பெறுமாயின் அது அசாதாரணமாக கொள்ளப்படமாட்டாது என்பதே அந்த உண்மையாகும்.