Events

அமீர் அலி பொது நூலகத்திற்கு நூல்கள் மற்றும் சான்றிதழ் வழங்கி கெளரவிப்பு

2016 ம் ஆண்டின் தேசிய வாசிப்பு மாதத்தின் ஆரம்ப விழா, ஆக்டோபர் 7ம் திகதி வவுனியா நகர சபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வு கல்வி இராஜாங்க அமைச்சர் கெளரவ வி. இராதாகிருஸ்ணன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கடந்த 2013ம் ஆண்டு தேசிய வாசிப்பு மாதத்தினை சம்மாந்துறை அமீர் அலி பொது நூலகம், மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்தமைக்காக இந்நூலகத்திற்கு நூல்களும், சான்றிதழும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது. இந் நூலகத்தின் சார்பாக  A.L.M. முஸ்தாக் இவ் அன்பளிப்புக்களைப் பெற்றுக்கொண்டார்.

Ameer Ali Public Library

இந் நிகழ்வுகள் தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை, கல்வி அமைச்சு, வவுனியா நகர சபை ஆகியவற்றின் ஏற்பாட்டுகளில் இடம்பெற்றது.

1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top