Muslim History

Rukhsana Izhar போன்று உங்களாளும் உலகை மாற்ற முடியுமா?

Rukhsana Izhar
Rukhsana Izhar போன்று உங்களாளும் உலகை மாற்ற முடியுமா?

பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணொருவர் அவரது பிரதேசத்தில் பசியால் வாடும் நூற்றுக்கணக்கானோருக்கு உணவளித்து மகிழ்கிறார்.

Rukhsana Izhar என்ற பாகிஸ்தான் நாட்டு பெண் Rizq என்றொரு பக்கத்தை Facebook Social Media வில் உருவாக்கி அதனூடு நூற்றுக்கணக்கான பசியால் வாடுவோருக்கு உணவளித்து வருகின்றார். இச் செயல் பல இளைய சமூகத்தினரை ஈர்த்துள்ளதால் அவர்களும் இவ் நன்மையான காரியத்திற்கு அதிக ஈடுபாடு காட்டி வருகின்றனர். அது மாத்திரமன்றி சமூக வளைத்தளங்களில் வெட்டியாக சுற்றி வருபவர்களுக்கு, இவ்வாறும் சமூக வளைத்தளங்களைப் பிரயோசனமாகப் பயன்படுத்தலாம் என்பதையும் Rukhsana Izhar கற்றுக் கொடுத்திருக்கின்றார். Voice of America போன்ற சர்வதேச Media நிறுவனங்களில் பேசப்படும் அளவுக்கு இவரது செயற்பாடு அமையப்பெற்றுள்ளது.

2015 April மாதத்தில் Rizq எனும் பக்கம் Rukhsana Izhar வின் மகனான Huzaifa Ahmad இனால் ஆரம்பிக்கப்பட்டது. நாளாவட்டத்தில் அவ் அமைப்பு வளர்ச்சியடைந்துவிட்டது. முதற் கட்டமாக Lahore இல் பின்தங்கிய பிரதேசங்களை இனங் கண்டு அதன் Map ஐ தங்களது Rizq பக்கத்தின் ஊடு அடையாளப்படுத்தி பிறரைக் கொண்டு உதவிசெய்தனர்.

அதே நேரம் தினமும் பகல் வேளையில் Huzaifa இன் தாயார் தனது வீட்டின் Gate ஐத் திறந்து வைத்து பசியால் ஏங்குபவர்களுக்கு உணவளித்தார்.

ஒன்று இரண்டாகி, இரண்டு மூன்றாகி எண்ணிக்கை கூடிச் சென்று அவரது முற்றம் நிரம்பியது. அதே நேரம் உணவு பற்றாக்குறையும் ஏற்பட்டது. இச் சந்தர்ப்பத்தில் Rizq FB பக்கத்தினூடு ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தி வயிறு நிறம்பும் அளவுக்கு உணவு பெற்றுக்கொடுக்கப்படுகின்றது.

Rukhsana தனது மகன், அவனது நண்பர்களையும் இன்னும் அதிகமானவர்களுக்கு உணவளிக்க ஊக்கமளித்துக்கொண்டே இருக்கின்றார்.

Rizq நாளாந்தம் 200 – 250 பேருக்கு உணவளித்து வருகின்றது. இதனைவிட மேலும் பலருக்கு உணவளிக்க வேண்டும் என்பதை Rizq இலக்காகக் கொண்டுள்ளது.

தனி ஒருவரினால் அல்லது சிலரினால் பலருக்கு உதவியளிக்கலாம் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும். நீங்கள் எந்த ரகம்? என்பதையும் உங்களுக்குள் கேட்டுக்கொள்ள இக்கட்டுரை தூண்டும் என எதிர்பார்க்கின்றோம்.

மேலும் இதுபோன்ற முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook(Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள். இதே போன்று உங்கள் ஊர் சம்பந்தப்பட்ட முதன்மைகளையும் விடயங்களையும் நிகழ்வுமேடையுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் கருத்துகளையும் வரவேற்கின்றோம்.. கருத்துகளை பதிய கீழே கிளிக் செய்யவும்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top