பாதிஹ் கலாபீடம் (Fathih Institute of Sri Lanka) ஆரம்பிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு விஷேட நிகழ்வொன்று அதன் பணிப்பாளர் கலாநிதி எச்.எல்.எம். ஹாரிஸ் தலைமையில் புதன்கிழமை மாலை (14/12/2016) இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் ஹுஸைன் இஸ்மாயில் கலந்து சிறப்பித்ததுடன், முக்கியத்துவ மிக்க உரையொன்றையும் நிகழ்த்தினார். நிகழ்வில் பாதிஹ் கலாபீடத்தின் முன்னாள் பணிப்பாளர் அஷ்- ஷெய்க் அக்றம் அபூபக்கர், பாதிஹ் கலாபீடத்தின் பிரதிப் பணிப்பாளர் தாஹா சேர் உட்பட பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.