அஜர்பைஜானைச் (Azerbaijan) சேர்ந்த ஓவியர் ஒருவர் புனித அல்குர்ஆனை ஒளி புகும் (Transparent) சில்க் அட்டையில் தூரிகை கொண்டு வரைந்துள்ளார்.
33 வயதையுடைய Tunzale Memmedzade, என்ற ஓவியரே 3 வருட முயற்சியை மேற்கொண்டு ஒளி புகும் அட்டையில் புனித அல்குர்ஆனை உருவாக்கியுள்ளார்.
ஓவியத்திலும் அலங்கார உருவாக்கத்திலும் தேர்ச்சி உள்ள இந்த பெண் ஓவியர் மிகவும் நுணுக்கமாக மீண்டும் மீண்டும் பதிந்து தன் கரங்களாலேயே இம் முயற்சியை செய்து முடித்துள்ளார். இதற்காக 50 மீற்றர் ஒளி புகும் சில்க் அட்டைகளும் 1,500 மில்லிலீற்றர் gold மற்றும் silver நிற மைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது இவர் ஓவியக் கலையின் வரலாறு தொடர்பான கற்கையினை துருக்கியில் அமைந்துள்ள Marmara பல்கலைக்கழகத்தில் பயின்று வருகின்றார்.