சூடு, பாலைவனம் இதுவே சவூதிக்கு பழக்கப்பட்ட ஒன்றாகும்.
ஆனால் நவம்பர் மாதத்தின் இறுதிப் பகுதியில் சவூதியின் பாலைவனத்தை அண்டிய பகுதிகளில் 3 பாகை செல்சியசை விட குறைந்த அளவு வெப்பநிலை நிலவியது. பனிப்பொழிவை கண்டிராத சவூதிக்கு இது அதிசயமான நிகழ்வாகும்.
மத்திய நகரமான ஷாஹரா விலும் வடமேற்கு நகரான தவூக்கிலும் நிலத்தை பனிப்படலம் மூடியிருந்தது. வடபகுதி நகரான தபார்ஜலில் மறை -3 செல்சியசாக வெப்பநிலை காணப்பட்டது.
வாகனங்கள் பாதைஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
ஏதோ ஆச்சரியம் நடந்துவிட்ட உணர்விலேயே மக்கள் காணப்பட்டனர்.
வரண்ட நிலமும் அதிக உஷ்னமும் கொண்ட சவூதி இவ்வாறு பனிப் பொழிவை கண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், பெருமானார் (ஸல்) அவர்களின் ஹதீஸ் ஒன்றினை ஞாபகத்திற்கு கொண்டுவருதல் பொருத்தமானதொன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
செல்வம் பெருகிக் கொழிக்காதவரை யுகமுடிவு நாள் நிகழாது. எந்த அளவிற்கு (செல்வம் பெருகும்) எனில், ஒருவர் தமது செல்வத்திற்குரிய ஸகாத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் செல்வார். ஆனால், அவரிடமிருந்து அதைப்பெற்றுக்கொள்ள ஒருவரையும் அவர் காணமாட்டார். மேலும், அரபுமண் மேய்ச்சல் நிலங்களாகவும் (கரை புரண்டோடும்) வாய்க்கால்களாகவும் மாறாதவரை (யுகமுடிவு நாள் நிகழாது).
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் 1839
பெருமானார் (ஸல்) அவர்களின் இந்த முன்னறிவிப்புக்கு கட்டியம் கூறுவதுபோல் இந்தப் பனிப்பொழிவு அமைந்திருப்பது ஆச்சரியத்துக்குரியதொன்றல்லவா ?!