Events

மாணவ, மாணவியருக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி – Kayalpatnam

Kayalpatnam
மாணவ, மாணவியருக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி - Kayalpatnam

பொதுத்தேர்வை எழுதி முடித்துள்ள மாணவ, மாணவியருக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியொன்றை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஆத் (TNTJ), மாணவரணி ஏற்பாடு செய்துள்ளனர். இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் ஏப்ரல் 2ம் திகதி, காயல்பட்டணம்(Kayalpatnam) எல் கே மேல்நிலைப்பள்ளியில் காலை 9.30 மணி முதல் 12.30 மணிவரை இன்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

  • எந்தத் துறையை தேர்ந்தெடுப்பது? எப்படி தேர்ந்தெடுப்பது?
  • தரமிக்க கல்வி நிறுவனங்களை தேர்வு செய்வது எப்படி?
  • வேலை வாய்ப்புகள் உள்ள துறைகள் என்னென்ன?
  • உங்களின் இலட்சியங்களுக்கு பொருளாதாரம் ஒரு தடையா?

இதுபோனற கேள்விகளுக்கு நிபுணர்கள் பதிலளிக்கவுள்ளார்கள். அனைத்து மாணவ, மாணவியர்களையும், பெற்றோர்களயும் கலந்து பயன்பெறுமாரும் மற்றும் இந்நிகழ்வில் கலந்துகொள்ள விரும்புவோர் ஏப்ரல் 1ம் திகதிக்கு முன்னர் தங்களை முன்பதிவு கொள்ளுமாரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வேண்டுகினறனர்.

தொடர்புகளுக்கு 8438479565, 8190926596, 7418023009

Kayalpatnam

To Top