கிழக்கு லண்டனைச் சேர்ந்த 8 முஸ்லிம் யாத்திரிகர்கள் ஹஜ் கடமையை நிறைவேற்ற பைசிக்கள் பயணத்தின் மூலம் சவூதி செல்லும் பணியில் இறங்கியுள்ளனர்.
இவர்களது பயணக் காலம் 6 வாரங்களைத் தாண்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 8 நாடுகளைக் கடந்து செல்லவேண்டியுள்ள இவர்கள், சுமார் 2000 மைல்களை கடந்து செல்லவேண்டியிருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதற்காக வேண்டி 1 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரித்தானியாவிலிருந்து பயணத்தை ஆரம்பிக்க இருக்கும் இவர்கள் பிரான்ஸ், ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகள் ஊடாக கிரேக்கத்தை சென்றடையவுள்ளனர். பாதுகாப்புக் காரணங்களுக்காக சிரியா மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளை தவிர்த்துள்ள இக் குழு, கிரேக்கத்திலிருந்து எகிப்துக்கு கப்பல் மூலம் பயணிக்கவுள்ளனர். பின்னர் எகிப்திலிருந்து பைசிக்கள் மூலம் சவூதி செல்ல நாடியுள்ளனர்.