இஸ்ரேலில் சூடு பிடித்துள்ள தீ பற்றிய நிழ்வுமேடையின் one வரி report
> 22.11.2016 செவ்வாய் மாலை.
> இஸ்ரேலின் வடபகுதி.
> (பலஸ்தீனுக்கு சொந்தமான யூதர்களினால் ஆக்கிரமிக்கப்பட்ட) ஹைஃபா நகரம்
> அண்டையிலுள்ள நகரங்களான ஜெருசலேம் மற்றும் மேற்குக் கரை பிரதேசங்களும் பாதிப்புறும் நிலை.
> காரணம் : இஸ்ரேலின் செயற்கைக்கோள் ஆமோஸ் – 6 வெடித்தமை தீ ஏற்பட நேரடி காரணமாகும்.
> 2 மூன்று மாதங்களாக நிலவுகின்ற வரட்சியும் காற்றும் தீயை பல பகுதிகளுக்கும் வேகமாக பரவச் செய்திருக்கின்றது
> 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
> கடந்த 2010ம் ஆண்டு இதே நகரில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 44 பேர் பலியாகியிருந்தனர்.
> 26 ஹெலிகாப்டர்கள் ஊடாக 48 தீ அணைப்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள போதிலும் இதுவரையில் தீயை அணைக்க முடியவில்லை.
> இஸ்ரேல் வெளிநாட்டு உதவி கோரல்.
> துருக்கி, கிரேக்கம், சைப்ரஸ், க்ரோஷியா, ரஷ்யா, இத்தாலி ஆகிய நாடுகள் தீயணைக்க, நிவாரண உதவி.
> இஸ்ரேலுக்கு உதவும் பலஸ்தீனின் விருப்பத்தை இஸ்ரேல் வரவேற்றுள்ளது.
> சேதம் 300 மில்லியன் டொலர்களை தாண்டும் நிலை.
> இஸ்ரேலுக்கும் அரேபியர்கள் மற்றும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே உள்ள பகை கூட இந்த தீ ஏற்பட காரணமாக இருக்கலாம் என்று இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு கருத்து தெரிவித்துள்ளார்.
>“இங்கே பற்றி எரியும் நிலம் எங்களுடையது. காடுகள் எங்களுடையது. மரங்கள் எங்களுடையது. செடி கொடிகள் எங்களுடையது எங்களின் பாலஸ்தீன மண்ணுக்குரியது. எனவே இந்த மண்ணுக்குச் சொந்தமில்லாதவர்கள்தான் இதை எரித்திருக்க வேண்டும்” என்று பலஸ்தீன் ஜனாதிபதி மஹ்மூட் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
> இறைவனின் சாபமே இந்த தீவிபத்துக்கான காரணம் என யூத மதகுரு ஒருவர் தெரிவித்துள்ளார்.
> பலஸ்தீனத்தின் கண்ணீரின் வலி இதுதான் என்பதை இஸ்ரேலர்களுக்கு உணர்த்(தீ) உள்ளது. குண்டுகள் மட்டுமல்ல தீ கூட அகதியாக்கும், இடம்பெயரச் செய்யும், வீடுகளை கொழுத்தி விடும் என்பதை அவர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளது.