துருக்கிக்கான ரஷ்ய தூதுவர் 19/12/2016 சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் பற்றிய நிழ்வுமேடையின் one வரி report.
# Dec.19.2016
# அண்ட்ரே கார்லோவ் (Andrey Karlov) துருக்கிக்கான ரஷ்ய தூதுவர்.
# வயது 62
# இவர் 1980-களின் பெரும்பாலான காலத்தை, வடகொரியாவுக்கான சோவியத் ஒன்றியத்தின் தூதராகப் பணியாற்றினார்.
# 1991-ல் சோவியத் ஒன்றியம் வீழ்ந்த பிறகு, தென் கொரியாவுக்கான ரஷ்ய தூதராக நியமிக்கப்பட்ட இவர், 2001-ல் வடகொரியாவுக்கான ரஷ்ய தூதராக நியமிக்கப்பட்டார்.
# 2013-ல் துருக்கிக்கான தூதராக நியமிக்கப்பட்ட அவர், ரஷ்ய ஜெட் விமானத்தை சிரியா எல்லையில் துருக்கி சுட்டு வீழ்த்தியதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட ராஜாங்க ரீதியிலான மோதல்களைக் கையாள வேண்டிய முக்கியப் பொறுப்பு அவருக்கு ஏற்பட்டது.
# துருக்கியின் தலைநகரான அங்காராவில் ‘துருக்கியர் பார்வையில் ரஷ்யா’ என்ற புகைப்படக் கண்காட்சியினைத் திறந்து வைத்து உரையாடிக்கொண்டிருக்கும்போது சுடப்பட்டார்.
# துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
# பலர் காயமடைந்துள்ளனர்
# துப்பாக்கியால் 8 தடவைகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
# இதேவேளை துருக்கிக்கான ரஷ்ய தூதுவர் ஆண்ட்ரே கார்லோஃப் உயிரிழந்தமையை ரஷ்ய வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளதுடன், இதை “பயங்கரவாத நடவடிக்கை” என வர்ணித்துள்ளது.
# துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபர் 22 வயதான அங்காராவில் காவல்துறைப்பிரிவில் தொழில்புரிபவர்.
# இவர் அலெப்போவை (Aleppo) மறக்காதே , சிரியாவை மறக்காதே என கோசமிட்டபடி துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டார்.
# பொலிஸார் நடத்திய பதில் தாக்குதலில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபர் மரணம்.
# பொலிஸ் அடையாள அட்டையுடன் கூட்டத்தில் புகுந்து, மர்மநபர் துப்பாக்கி சூடு நடத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
# ரஷ்யா, சிரிய அரசுக்கு ஆதரவாக செயற்பட்டு அலெப்போவை தாக்குவதற்கு துருக்கிய பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு பல கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியிருந்தனர்.
# மாஸ்கோவில் ரஷியா, ஈரான், மற்றும் துருக்கி வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் சிரியா குறித்து விவாதிக்க இருந்த நிலையில் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
# அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, பிரிட்டன் வெளியுறவுச் செயலர் போரிஸ் ஜான்ஸன், பிரான்ஸ் அதிபர் பிரான்சிஸ் ஒல்லாந்த் உள்ளிட்ட தலைவர்கள் இந்தச் சம்பவத்தைக் கண்டித்துள்ளனர்.
இத்துப்பாக்கி பிரயோகத்தின் நேரடி காட்சியினை கீழே காணலாம். பலவீனமார்கள் பார்வையிட வேண்டாம்.