குவைத்தில் இயங்கி வரும் தமிழ் அமைப்பான குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த 12ம் ஆண்டு மீலாது விழா நிகழ்ச்சிகள் அச்சங்கத்தின் தலைவர் மௌலவி எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ அவர்களின் தலைமையில் 2016 டிசம்பர் 8 தொடக்கம் 10 ம் திகதி வரை சிறப்புற இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை பொதுச் செயலாளர், நீடூர் அரபுக்கல்லூரி பேராசிரியர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்கள்.
மகளிர் அமர்வு, கருத்தரங்கம் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளுடன், சிறப்பு மலர் மற்றும் வருட நாட்காட்டி வெளியிடப்பட்டது.
நிகழ்வில் ஏறக்குறைய 2,200 சகோதர, சகோதரிகள் பங்கேற்றனர். நிகழ்வின் சில தருணங்களை கீழே காணலாம்.