புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி Donald Trump, இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தை டெல்அவிவில்(Tel Aviv) இருந்து ஜெரூஸலத்திற்கு மாற்றும் நடவடிக்கைக்கு முன்னுரிமை வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது ஜெரூஸலத்திற்கு அமெரிக்க தூதரகம் மாற்றப்படும் என்ற கருத்து பல தடவைகள் ரம்மினால் வெளியிடப்பட்டதாக, வானொலி நிகழ்ச்சியொன்றின்போது ட்ரமின் சிரேஷ்ட உதவியாளரான Kellyanne Conway யினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொனால்ட் ட்ரம்க்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த George W. Bush, Bill Clinton ஆகிய ஜனாதிபதிகளும் டெல்அவிவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெரூஸலத்திற்கு மாற்றுவதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இதே போன்று உலக நாடுகள் பலவும் டெல்அவிவையே இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து டெல்அவிவிலேயே தமது நாடுகளின் தூதரகங்களை நிறுவியுள்ளன.
“மத்திய கிழக்கில் காணப்படும் அமெரிக்காவின் மிகச் சிறந்த நட்பு நாடு இஸ்ரேலாகும். யூத-அமெரிக்க உறவைப் பலப்படுத்தும் வகையில் யூதர்களின் விருப்பை நிறைவேற்றுவதற்காகவே அமெரிக்க தூதரக மாற்றல் நடவடிக்கை” என Kellyanne Conway குறிப்பிட்டுள்ளார்.
“இந் நகர்வு சிறப்பானதும் எளிதானதுமாகும். டொனால்ட் ட்ரம் இந்த விடயம் பற்றி எத்தனை விவாதங்களில் வாதாடியிருப்பார் ?!” என்று மேலும் Kellyanne Conway தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu, CBS தொலைக்காட்சியின் “60 Minutes” நிகழ்ச்சியில் பின்வருமாறு கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
“அமெரிக்காவின் முன்னைய ஜனாதிபதிகளை விட புதிய ஜனாதிபதியுடன் மிகச்சிறந்த உறவு நிலையினை பேணமுடியும் என எதிர்பார்க்கின்றோம். பலஸ்தீனுடனான சிக்கல் நிலையில் ட்ரமினால் தீர்வைப் பெறமுடியும் என எதிர்பார்க்கின்றோம்.
ட்ரம் பைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். அவரின் அணுகுமுறையை நினைத்துப் பார்க்கின்றேன். இஸ்ரேல் மீதான அவரின் ஆதரவு மிகவும் தெளிவானது. யூதர்களுக்காகவும் யூத தேசம் தொடர்பிலும் ட்ரம் வரவேற்பு மனநிலையில் உள்ளார். இதைப்பற்றி எந்தவித கேள்விகளுக்கும் இடமில்லை” என்று கருத்துத் தெரிவித்தார்.